காணொளி: 28 லட்டுகளை தின்று போட்டியில் வென்ற நபருக்கு கிடைத்தது என்ன?
காணொளி: 28 லட்டுகளை தின்று போட்டியில் வென்ற நபருக்கு கிடைத்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
30 நிமிடத்தில் உங்களால் எத்தனை லட்டுகளை உண்ண முடியும்? 52 வயதான இந்த விவசாயி 28 லட்டுகளை உண்டு வென்றுள்ளார். குஜராத்தின் 'கிராமப்புற ஒலிம்பிக்' போட்டிகளின் ஒரு பகுதியாக, தனித்துவமான லட்டு உண்ணும் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு லட்டும் பருப்புச்சாறும் வழங்கப்பட்டது. ஏற்கெனவே 11 முறை வென்றவரான மவ்ஜி தாதா இம்முறை வெல்ல முடியவில்லை. 28 லட்டுகளை உண்டு பலவந்த்பாய் கக்ஜிபாய் வெற்றிபெற்றார். போட்டியில் வென்ற அவருக்கு 2000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்தத் திருவிழா, அப்பகுதி பழங்குடியின மக்களின் கலாசாரம் மற்றும் திருமணத்துக்கான இணையைத் தேர்வு செய்யும் பாரம்பரிய நிகழ்வாகவும் நடைபெறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



