பிபிசி தமிழ் தனியுரிமைக் கொள்கை

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உங்கள் நம்பிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, உங்கள் தனிப்பட்ட தகவலின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் பேணுவதில் பிபிசி உறுதிபூண்டுள்ளது என்பதே இதன் பொருள். இந்த அறிவிப்பை நீங்கள் படிப்பதன் முக்கியத்துவம், இதன்மூலம் இதுபோன்ற தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படி மற்றும் ஏன் பயன்படுத்துகிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின்படி, எங்களுடனான உங்கள் தொடர்புகொள்ளுதலின் போதும் அதற்குப் பின்னரும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரித்துப் பயன்படுத்துகிறோம் என்பதை இந்த தனியுரிமை அறிவிப்பு விவரிக்கிறது.

கலெக்டிவ் நியூஸ்ரூம் பிரைவேட் லிமிடெட் ("கலெக்டிவ் நியூஸ்ரூம்") எனப்படும் புதிய, சுதந்திரமான, இந்தியக் குடியுரிமை உள்ளவர்களுக்குச் சொந்தமான நிறுவனம் இப்போது பிபிசியின் ஆறு இந்திய மொழிச் சேவைகளுக்கான உள்ளடக்கத்தைத் தயாரித்து வெளியிடும் என்பதை தயவு கூர்ந்து நினைவில் கொள்ளவும். அதாவது, பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் ஆகியவை பங்களிப்பாளர்கள், பிபிசி இணையதளப் பயனர்கள் மற்றும் பிறரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், கலெக்டிவ் நியூஸ்ரூம் ஆறு இந்திய மொழிச் சேவைகளுக்கான உள்ளடக்கத்தைத் தயாரித்து வெளியிட முடியும் என்பதை உறுதிசெய்யும். கலெக்டிவ் நியூஸ்ரூம் உங்கள் தனிப்பட்ட தகவலை நம்பிக்கைக்குரியவராக எவ்வாறு கவனித்துக்கொள்கிறது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்காக, தனியுரிமைக் கொள்கை பக்கத்தில் அவர்களின் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

பிபிசி எந்த மாதிரியான தனிப்பட்ட தரவுகளைச் சேகரிக்கும், அதை நாங்கள் எப்படிப் பயன்படுத்துவோம்?

உங்கள் தனிப்பட்ட தகவல் ஏன் எங்களுக்குத் தேவை என்பதைப் பற்றிய விவரங்களையும், அதைச் சேகரிப்பதற்கு முன்பு அதை எப்படிப் பயன்படுத்துவோம் என்பதையும் பொருந்தக்கூடிய சட்டங்களால் அனுமதிக்கப்படும் வகையில் உங்களுக்குத் தெரிவிப்போம்.

அ. நீங்கள் எங்களுக்குத் தரும் தகவல்

பொதுவாக, நீங்கள் பிபிசியின் இணையதளங்களுக்குச் சென்று, செய்தித் தொகுப்பு, நேரலை அரட்டை, செய்திகள் மற்றும் போட்டிகள் போன்ற எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, வயது, தொலைபேசி அல்லது செல்பேசி எண்ணை வழங்குமாறு நாங்கள் கேட்கலாம்.

நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவலில், நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் கருத்து அல்லது காணொளி (ஒரு "படைப்பு") நபர்களின் பெயர்கள், புனைப்பெயர்கள், முகங்கள், புகைப்படங்கள், குரல்கள், ஒலி - ஒளிப் பதிவுகள் மற்றும் படைப்புகளில் தோன்றும் தோற்றங்கள் போன்றவை இருக்கலாம்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நீங்கள் 16 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவராகவோ இருந்தால் (அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட சட்டப்பூர்வ பெரும்பான்மை வயதுக்கு உள்பட்டவராக இருந்தாலும் ), பிபிசி இணையதளங்களை அணுகி உங்களின் தனிப்பட்ட தகவல்களை எங்களிடம் சமர்ப்பிக்கும் முன் உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலைப் பெறவேண்டும். இந்த அனுமதியின்றி பிபிசி இணையதளங்களை அணுகவும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு வழங்கவும் உங்களுக்கு அனுமதி இல்லை.

ஆ. சாதனத்தின் விவரங்கள்

நீங்கள் பிபிசியின் இணையதளங்களுக்குச் செல்லும்போது, குக்கீஸ் மற்றும் பிற கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் உங்கள் சாதனங்கள் மற்றும் இணைய உலாவிகளில் இருந்து சில தொழில்நுட்பத் தகவல்களை நாங்கள் தானாகவே சேகரிப்போம். இதில் பின்வருவன அடங்கும்:

  • ஐ.பி. (இன்டர்நெட் புரோட்டோகால்) முகவரி
  • சாதனத்தின் ID
  • செயலியின் ID
  • விற்பனையாளர் ID
  • விளம்பர ID

எம்மைப் பற்றி சேகரிக்கப்பட்ட இந்தத் தகவலை பிபிசி எவ்வாறு பயன்படுத்தும்?

பின்வரும் வகையான செயல்பாடுகளுக்காக உங்கள் தகவலைப் பயன்படுத்துவோம்.

  • எங்கள் சேவைகளை வழங்கவும், அவற்றைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்கவும்;
  • எங்கள் நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் பங்களிப்புகளை வழங்கும் சூழலில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை பிபிசி எவ்வாறு கையாளும் என்பது தொடர்பான தகவல்களுக்கு, பங்களிப்பாளர்களுக்கான எங்கள் தனியுரிமை அறிவிப்பை இங்கே காணவும்.
  • செய்திகள், சலுகைகள் மற்றும் விளம்பரங்களுடன் உங்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்ப;
  • உங்கள் கோரிக்கைகள், புகார்கள் மற்றும் விசாரணைகளைக் கையாள;
  • எங்கள் சேவைகளில் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டவும், அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவும்
  • எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்கு சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்த;
  • நீங்கள் எந்த வகையான சேவைகளைப் பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள;
  • பிபிசி ஆராய்ச்சி மற்றும் புதுமைகளைச் செயல்படுத்த;

பிபிசிக்கு நீங்கள் வழங்கும் தகவலை சேவை மேலாண்மை உள்பட பல்வேறு வழிகளிலும் பயன்படுத்துவோம். அதாவது, நீங்கள் பிபிசியில் பதிவுசெய்துள்ள சேவைக்காக பிபிசி உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் ஆட்சேபனைக்குரிய, பொருத்தமற்ற அல்லது புண்படுத்தும் உள்ளடக்கத்தை எங்களுக்கு அனுப்பினால், மூன்றாம் தரப்பினரிடம் (பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்கள்) உங்கள் நடத்தையை விசாரிக்க அல்லது புகாரளிக்க, உங்கள் தனிப்பட்ட தகவலை, சூழ்நிலைகளைப் பொறுத்து நாங்கள் பயன்படுத்தலாம் என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.

வெளி இணைப்புகள்:

நாங்கள் சில நேரங்களில் பிபிசி அல்லாத தளங்களின் இணைப்புகளை எங்கள் பக்கத்தில் வழங்குகிறோம். எங்களுடைய சேவைகளை நாங்கள் சில சமயங்களில் அவர்களுக்கு வழங்குகிறோம் - எடுத்துக்காட்டாக, சமூக ஊடகங்களில் நீங்கள் எங்களுடன் இணையும்போது.

மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

  • நாங்கள் இணைப்புகளை வழங்கும் தளங்களை ஆமோதிப்பதில்லை
  • அவற்றின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல அல்லது அவற்றைப் பயன்படுத்தினால் உங்களுக்கு ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல
  • நீங்கள் அல்லது வேறு யாரேனும் ஓர் இணைப்பைப் பகிர்ந்தால், அது இணைக்கும் தளத்தில் உள்ள உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல
  • வெளி இணைப்புத் தளங்கள் அவற்றின் சொந்த பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் தனியுரிமை அறிவிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் இதுபோன்ற இணையதளங்களை அணுகுவதற்கு முன்பு அந்த அறிவிப்புகளைப் படிக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்.

எனது தனிப்பட்ட தகவல்களை பிபிசி எப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறது?

பின்வரும் வழிகளில் உங்கள் தகவலைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறோம்:

  • நீங்கள் எதையாவது பொது வெளியில் பகிரங்கப்படுத்தும் போது;
  • எங்கள் சேவைகளை இயக்க மற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தும் போது;
  • விளம்பர நிறுவனங்கள் விளம்பர இடத்தை வாங்கி தங்கள் விளம்பரங்களை தனிப்பயனாக்கும் போது;
  • பிபிசி குடும்பத்தில் உள்ள நிறுவனங்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம்
  • எங்கள் அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் போன்ற பிபிசிக்காக பணிகளை மேற்கொள்ளும் தரப்பினருடன் தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்து கொள்கிறோம்
  • நாங்கள் கூட்டு ஆராய்ச்சி செய்யும்போது;
  • உங்கள் தகவலை மற்ற நிறுவனங்களுக்கு நாங்கள் அனுப்ப வேண்டும் என்று சட்டப்படி கோரும் போது;

எம்மைப்பற்றி சேகரிக்கும் தகவல்களை பிபிசி எவ்வளவு காலம் வைத்திருக்கும்?

நீங்கள் எங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட தகவலை வழங்கினால், நிறுவன தக்கவைப்பு அட்டவணையின்படி நாங்கள் அதை வைத்திருப்போம். கீழ்க்காணும் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம்:

  • நாங்கள் உங்களுக்குச் சொன்ன செயல்பாடுகள் நடைபெறத் தேவைப்படும் வரை அல்லது அதைத் தக்கவைக்க சரியான காரணம் இருந்தால் மட்டுமே உங்கள் தகவலை நாங்கள் வைத்திருக்கிறோம்.
  • அது எந்த வகையான தகவல் என்பது குறித்தும், சேகரிக்கப்பட்ட அளவு, அவற்றின் உணர்திறன் தகுதிக்கேற்ப மற்றும் ஏதேனும் சட்டத் தேவைகளைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம்
  • எங்கள் சேவைகளை நாங்கள் வடிவமைத்துள்ளோம், எனவே உங்கள் தகவலை நாங்கள் வைத்திருக்க வேண்டியதை விட அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தேவைப்படுவதை விட கூடுதலாக நாங்கள் வைத்திருக்க மாட்டோம்.
  • நீங்கள், எங்களிடம் கேட்கும்பட்சத்தில், உங்கள் தனிப்பட்ட தகவலைத் தக்கவைத்துக்கொள்வது பற்றிய தகவலை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம், மேலும் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அவ்வாறு செய்யவும் நாங்கள் அனுமதிக்கப்படுகிறோம்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எங்கே சேமிக்கிறோம்?

பிபிசி ஓர் உலகளாவிய ஊடக அமைப்பாகும், அதன் தலைமையகம் பிரிட்டனில் உள்ளது.

எங்களுக்கு சேவைகளை வழங்கும் சில நிறுவனங்கள் இந்தியா, பிரிட்டன் அல்லது ஐரோப்பிய பொருளாதார மண்டலம் (EEA) ஆகியவற்றுக்கு வெளியே இருந்து தங்கள் சேவைகளை இயக்குகின்றன. அவர்களின் பாதுகாப்பு நிலைகளில் நாங்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே நாங்கள் அதை அனுமதிக்கிறோம். நீங்கள் எங்களுக்கு தனிப்பட்ட தகவலை வழங்கும்போது, பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் அத்தகைய பரிமாற்றம் தடைசெய்யப்படாத வரை, அது இந்தியா, பிரிட்டன் அல்லது ஐரோப்பிய பொருளாதார மண்டலத்துக்கு வெளியே உள்ள இடத்திற்கு மாற்றப்படலாம், சேமிக்கப்படலாம் அல்லது செயலாக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

எமது உரிமைகள் என்னென்ன?

உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கீழ்க்காண்பவற்றில், உங்களுக்கான உரிமை உண்டு:

  • உங்கள் தகவலின் நகலைக் கோருதல்;
  • உங்களைப் பற்றி பெரிய முடிவுகளை எடுக்க ரோபோக்களை அனுமதிக்காதிருக்க;
  • தவறான தகவலைச் சரிசெய்வதற்கும், அவற்றை அழிப்பதற்கும், அவற்றைக் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துமாறு கோருவதற்கும்;
  • உங்கள் எண்ணத்தை மாற்றி, உங்கள் தகவலைப் பயன்படுத்துவதை நிறுத்தும்படி எங்களிடம் கேட்க. எடுத்துக்காட்டாக, எந்த சந்தைப்படுத்தும் மின்னஞ்சல்களைப் பெறுவதில் இருந்து விலக அல்லது தனிப்பயனாக்கத்தை முடக்கவும்;
  • தனிப்பயனாக்கப்பட்ட விளம்பர குக்கிகள் மற்றும் பிற கண்காணிப்பிலிருந்து விலக;

சில நேரங்களில் எங்களால் உங்களுக்கு உதவ முடியாமலும் போகலாம் என்பதைத் தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கோருவதை நாங்கள் செய்ய முடியாது என்று சட்டம் சொன்னாலோ, ஊடகவியல் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து பயன்படுத்த சட்டம் அனுமதித்தாலோ நாங்கள் நீங்கள் கோருவதைச் செய்ய முடியாது.

மேலதிகத் தகவலை நான் எங்கே பெறுவது?

பிபிசியின் தனியுரிமை மற்றும் குக்கீஸ் கொள்கையின் முழுப் பதிப்பைப் பார்க்க, பிபிசி தனியுரிமை மற்றும் குக்கீஸ் கொள்கை (பிரிட்டனுக்கு வெளியே) - பிபிசியைப் பயன்படுத்துதல் என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

பிபிசி உங்கள் தனிப்பட்ட தகவலை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது உங்கள் உரிமைகள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால், dataprotection.officer@bbc.co.uk என்ற முகவரியில் எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்புகொள்ளலாம்.

கலெக்டிவ் நியூஸ்ரூம் உங்கள் தனிப்பட்ட தகவலை எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், info@collectivenewsroom.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அவர்களின் தரவு பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ளவும்.