நேபாளம்: வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் 12 புகைப்படங்கள்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு கொண்டு செல்லும் மீட்புப்படையினர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு கொண்டு செல்லும் மீட்புப்படையினர்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 291 வெளிநாட்டினர் உட்பட 384 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை விளக்கும் புகைப்படத் தொகுப்பு.

நேபாளத்தில் திடீர் வெள்ளம்

பட மூலாதாரம், Reuters

வெள்ளபாதிப்புக்கு பிறகு மணல் சூழ்ந்திருக்கும் குடியிருப்புகள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெள்ளபாதிப்புக்கு பிறகு மண் சூழ்ந்திருக்கும் குடியிருப்புகள்
நேபாளம் மற்றும் திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, நேபாளம் மற்றும் திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை.
மக்கள் சூழ்ந்த ஒரு கட்டிடத்தை வெள்ளம் தாக்கும் காட்சி.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மக்கள் சூழ்ந்த ஒரு கட்டடத்தை வெள்ளம் தாக்கும் காட்சி.
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் மணல் திட்டுக்களில் பாதியளவு மூடிய வீடு.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போதேகோசி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் பாதியளவு மூடிய வீடு.
நேபாளம் வெள்ளத்திற்கு பிறகு சேற்று சகதியால் சூழப்பட்ட குடியிருப்புகளை வேதனையுடன் பார்க்கும் மக்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேபாளம் வெள்ளத்திற்கு பிறகு சேற்று சகதியால் சூழப்பட்ட குடியிருப்புகளை வேதனையுடன் பார்க்கும் மக்கள்.
291 வெளிநாட்டினர் உட்பட 384 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

வெள்ளத்திற்குப் பிறகு நேபாளத்தில் பெரிய அளவிலான நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வெள்ளத்திற்குப் பிறகு நேபாளத்தில் பெரிய அளவிலான நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் திடீர் வெள்ளம்

பட மூலாதாரம், Reuters

நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் நாட்டின் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

வெளிநாட்டுக் கொள்கை அமைச்சர் கனால் கூறுகையில், 26 காவல்துறை அதிகாரிகள், 9 ஆயுதம் ஏந்திய காவல்துறைப் படையினர், 44 நேபாள ராணுவ வீரர்கள், சுங்க மற்றும் குடியேற்றப் பணியாளர்கள் மற்றும் சில உள்ளூர் குடிமக்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு