காணொளி: ஒரு நாளைக்கு 3 லிட்டர் சிறுநீர் வெளியேற வேண்டும் - யாருக்கெல்லாம்?
சிலர் கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கும்போது அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த சிறுநீரகக் கல் உருவாகும் அபாயம் உலகில் பத்தில் ஒருவருக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிறுநீரகக் கல் உள்ளவர்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒவ்வொருவரின் உடலையும் அவர்கள் வாழும் காலநிலையையும் பொறுத்து தண்ணீர் குடிக்க வேண்டிய அளவு மாறுபடும். ஆகவே சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார் சிறுநீரக மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.
யாருக்கெல்லாம் சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான அபாயங்கள் அதிகம்? சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள் என்னென்ன? அவை என்ன மாதிரியான உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கும்? யாரெல்லாம் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது குறித்து சிறுநீரக மருத்துவர் கோபாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். முழு தகவல் காணொளியில்..
தயாரிப்பு: சண்முகப்பிரியா
ஒளிப்பதிவு: ரஞ்சித்
படத்தொகுப்பு: ஜனார்த்தனன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



