சிகாகோவில் உயர்த்தப்பட்ட நிலையிலேயே பல மணிநேரம் சிக்கிய பாலம்
சிகாகோவில் உயர்த்தப்பட்ட நிலையிலேயே பல மணிநேரம் சிக்கிய பாலம்
பிரசுரிக்கப்பட்டது
சிகாகோ நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு பாலம், செப்டம்பர் 2ம் தேதி அன்று உயர்த்தப்பட்ட நிலையிலேயே பல மணிநேரம் சிக்கிக்கொண்டது.
இதனால் ஒரு முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான இங்கு பயணங்களும் இடையூறுக்குள்ளாகின.
வெப்பம் காரணமாகவே இந்தப் பாலத்தில் கோளாறு ஏற்பட்டதாக சிகாகோ போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



