திருட்டு பயத்தால் காரை வீட்டின் 2வது மாடியில் நிறுத்திய நபர் - காணொளி
பிகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருட்டு பயம் காரணமாக, ஒருவர் தனது புதிய காரை கிரேனின் உதவியுடன் வீட்டின் இரண்டாவது மாடியில் நிறுத்தியுள்ளார்.
மனோஜ் யாதவ் என்ற நபர் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்கியிருந்தார்.
அவர் இஸ்ரேலில் வேலை செய்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி மட்டும் வசித்து வருகிறார். சில காலத்திற்கு அவர் ஒரு ஓட்டுநரை பணியில் அமர்த்தியிருந்தார். ஆனால் அந்த ஓட்டுநரும் வேறு காரணத்தால் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் தனது புதிய காரின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்த மனோஜ் யாதவ், காரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேறு வழி எதுவும் கிடைக்காத நிலையில், கிரேனை வரவழைத்து, காரை வீட்டின் இரண்டாவது மாடிக்கு தூக்கிச் சென்று அங்கு நிறுத்தி வைத்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



