காணொளி: அமெரிக்காவில் ஓடும் ரயில்களில் துளையிட்டு கொள்ளையடித்த கும்பல்

காணொளிக் குறிப்பு, காணொளி: அமெரிக்காவில் ஓடும் ரயில்களில் துளையிட்டு கொள்ளையடித்த கும்பல்
காணொளி: அமெரிக்காவில் ஓடும் ரயில்களில் துளையிட்டு கொள்ளையடித்த கும்பல்
பிரசுரிக்கப்பட்டது

ஓடும் ரயிலின் பெட்டியில் துளையிட்டு திருட்டு நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மத்திய மாவட்டத்துக்கான அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்த தகவலின்படி, இந்தக் கும்பல் குறைந்தது 36 ரயில்களைக் குறிவைத்து, சுமார் 2.2 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

பிரபல நிறுவனங்களின் ஸ்னீக்கர் காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இவர்கள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவங்களில் மொத்தம் 14 பேர் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில் திருடப்பட்ட பொருட்களை இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு