'திபெத்தில் உருவான புதிய ஏரி': மீண்டும் வெள்ள அபாயம் உள்ளதாக சீனா எச்சரிக்கை
நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், புதிதாக உருவாகியுள்ள் ஏரி புதிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பனிப்பாறை சரிவு நிகழ்ந்ததாக கருதப்படும் லாங்டாங் லிருங் சிகரத்திற்கு அருகில் இந்த ஏரி உருவாகி இருக்கிறது. இந்த ஏரி காரணமாக இரண்டாவது முறையாக வெள்ளம் ஏற்பட அதிக ஆபத்து இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.
சீன அரசு ஊடக தகவலின்படி, வெள்ளிக்கிழமை நிலவரப்படி சுமார் 2.5 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் அங்கு தேங்கி உள்ளது. இந்த ஏரி உடையக்கூடும் என்ற அச்சத்தால் திபெத் பகுதியில் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் அதிகாரிகள் ஆய்வு செய்து நிலைமை கட்டுக்குள் உள்ளது என மதிப்பிட்டதை தொடர்ந்து, மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கின. காலப்போக்கில் இந்த ஏரி இயற்கையாக வற்றிப்போகவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



