காணொளி: இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு புதிய ஏஐ கருவியால் உள்ள ஆபத்தும் தீர்வும்
காணொளி: இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு புதிய ஏஐ கருவியால் உள்ள ஆபத்தும் தீர்வும்
பிரசுரிக்கப்பட்டது
அண்மையில் மெட்டா நிறுவனம் ம்யூஸ் இமேஜ் என்ற புதிய ஏஐ இமேஜ் ஜெனரேட்டர் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ஒரு பயனர், தன்னுடைய உள்ளீட்டில் ஏதேனும் ஒரு பொது இன்ஸ்டாகிராம் கணக்கைக் குறிப்பிட்டால், இந்த ஏஐ கருவி அந்த கணக்கில் இருக்கும் புகைப்படங்களின் அடிப்படையில் யதார்த்தமான ஏஐ படங்களை உருவாக்கித் தரும்.
பொதுவெளியில் இருக்கும் புகைப்படங்கள் இந்த முறையில் பயன்படுத்தப்படும்போது, அந்த கணக்கின் உரிமையாளருக்கு எந்தவொரு அறிவிக்கையும் போவதில்லை என்றும் கூறப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



