ஓமனின் கடற்கரை அருகே பழுதடைந்த இந்திய கொடி ஏந்திய கப்பல் - சமீபத்திய தகவல் என்ன?

ஓமனின் கடற்கரை அருகே இந்தியக் கொடி ஏந்திய ஒரு கப்பலின் எஞ்சின் பழுதடைந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஓமனின் கடற்கரை அருகே இந்தியக் கொடி ஏந்திய ஒரு கப்பலின் எஞ்சின் பழுதடைந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. (சித்தரிப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமையன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, ஓமானின் கடற்கரைக்கு அருகே இந்தியக் கொடி ஏந்திய ஒரு கப்பலின் எஞ்சின் பழுதடைந்ததாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்தது.

"ஓமனின் கடற்கரைக்கு அருகே இந்தியக் கொடி ஏந்திய விராட்-1 கப்பல் தொடர்பான ஒரு சம்பவம் குறித்த தகவல் தூதரகத்திற்கு கிடைத்துள்ளது. இக்கப்பலில் இந்திய மாலுமிகள் 14 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஓமன் அதிகாரிகளுடனும், அருகில் உள்ள கப்பல்களுடனும் இணைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளது.

இதற்குப் பிறகு தூதரகம் மற்றொரு பதிவை வெளியிட்டு, கப்பலின் எஞ்சின் பழுதடைந்துவிட்டது என்ற தகவலைத் தந்தது.

"தகவலின்படி, கப்பலின் எஞ்சின் பழுதடைந்தது, அதன் பிறகு மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக ஒரு லைஃப்ராஃப்ட் (மீட்புப் படகு) மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஓமன் அதிகாரிகள் மற்றும் அருகில் உள்ள கப்பல்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கை தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது" என்று தூதரகம் எழுதியுள்ளது.

இதற்கு முன்பு ஓமனின் கடற்கரைக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் பேசியிருந்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு