காணொளி: 'விசில்' ஊதிய காவலர் - எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி

காணொளி: 'விசில்' ஊதிய காவலர் - எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி

கரூரில் வாக்குப்பதிவின்போது பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த கர்நாடகாவை சேர்ந்த போலீசார் விசில் ஊதியதாக கூறி திமுக முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் வாக்களித்து வந்தனர்,

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர், வரிசையில் நின்றிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தொடர்ந்து விசில் அடித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னமாக விசில் இருக்கும் சூழலில், திமுக சார்பில் சீஃப் ஏஜெண்டாகப் பணியாற்றி வரும் முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ், இந்தச் சம்பவம் குறித்து அங்கு இருந்த காவல்துறையினர் கொடுத்த விளக்கத்தை ஏற்க மறுத்து விசில் அடிக்கக்கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு