காணொளி: பேரணியில் ஏவுகணையைச் சுற்றி கூடிய இரான் மக்கள்

காணொளி: பேரணியில் ஏவுகணையைச் சுற்றி கூடிய இரான் மக்கள்

இரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற பேரணியில் பாலிஸ்டிக் ஏவுகணையைச் சிற்றி திரண்ட மக்கள், இரான் கொடிகளை அசைத்தனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்கா - இரான் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக கூறியதைத் தொடர்ந்தது இந்நிகழ்வு நடந்தது.

எனினும், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்பாக இரானுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இரானிய துறைமுகங்களை அமெரிக்கா தொடர்ந்து மறித்து வருகிறது.

இரான், ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று சரக்கு கப்பல்களை தாக்கியதாக இரானிய ஊடகங்கள் கூறுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு