காணொளி: முதலில் பின்னடைவு... கடைசியில் இங்கிலாந்தை வீழ்த்திய அர்ஜெண்டினா

காணொளிக் குறிப்பு, மெஸ்ஸி
காணொளி: முதலில் பின்னடைவு... கடைசியில் இங்கிலாந்தை வீழ்த்திய அர்ஜெண்டினா
பிரசுரிக்கப்பட்டது

மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது அர்ஜெண்டினா.

இந்திய நேரப்படி வரும் ஜூலை 20ஆம் தேதி ஸ்பெயினை இறுதிப்போட்டியில் அந்த அணி எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் அர்ஜெண்டினாவுக்கு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை.

நாக் அவுட் சுற்றில் எகிப்துக்கு எதிராக 0-2 என அர்ஜெண்டினா பின் தங்கியிருந்தது. கடைசி சில நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து 3-2 என அர்ஜெண்டினா வென்றது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியும் அப்படியான ஒரு ஆட்டமாகதான் அர்ஜெண்டினாவுக்கு அமைந்தது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு