நேபாளம்: சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்புக் குழு மீட்கும் காட்சி

காணொளிக் குறிப்பு,
நேபாளம்: சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்புக் குழு மீட்கும் காட்சி
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் காரணமாக சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்புப் பணியாளர்கள் மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.

மேல் திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் அடர்ந்த சேற்றுக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களை மீட்பதற்காக அவர்கள் அங்கு சென்றனர். நேபாள பிரதமர் அலுவலகம் இந்த காட்சிகளை வெளியிட்டுள்ளது.

ரசுவா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இந்த சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேரை மீட்டு வெளியேற்றியுள்ளதாகவும், மேலும் 533 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாகவும் நேபாள பிரதமர் அலுவலகம் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், சுரங்கப்பாதைக்குள் தொடர்ந்து சிக்கியுள்ள 100-க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு