காணொளி: ஒன்றன் பின் ஒன்றாக 9 முட்டைகளை வாய் வழியாக வெளியேற்றிய நாகப்பாம்பு
காணொளி: ஒன்றன் பின் ஒன்றாக 9 முட்டைகளை வாய் வழியாக வெளியேற்றிய நாகப்பாம்பு
பிரசுரிக்கப்பட்டது
நாகப்பாம்பு ஒன்று ஒன்றன் பின் ஒன்றாக 9 முட்டைகளை தன் வாய் வழியாக வெளியேற்றிய தருணம் இது. இந்த காட்சி, நம்புவதற்கு ஏற்றதாக இல்லாமல் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த சம்பவம் உண்மையில் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.
நாகப்பாம்பு ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. இந்த பாம்பு அங்கிருந்த 2 கோழிகளை கொன்றதோடு கோழி முட்டைகளையும் விழுங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குடும்பத்தினர் பாம்பு மீட்பருக்கு தகவல் கொடுக்க அவர் அந்த நாகப்பாம்பை பிடித்தார். இந்த மீட்புப்பணியின் போது விழுங்கியிருந்த ஒன்பது முட்டைகளையும் நாகப்பாம்பு வெளியேற்றியது. பின்னர், அது அருகிலுள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



