இரான் போர் குறித்து ஜே.டி. வான்ஸ் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
இரான் போர் குறித்து ஜே.டி. வான்ஸ் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஜே.டி. வான்ஸ், "இதை நான் போர் என கூறமாட்டேன். தற்போது அங்கு நேரடி மோதல் எதுவும் நடைபெறவில்லை. சில பகுதிகளில் தீவிரமடைந்திருந்தாலும், பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள் சுமார் ஆறு வாரங்கள் மட்டுமே நீடித்தன.

மிட்நைட் ஹேமர் நடவடிக்கை மூலம் அணுசக்தி நிலையங்களையும் எபிக் ஃப்யூரி மூலம் அவர்களின் ஆயுத உற்பத்திக்குத் தேவையான பாதுகாப்புத் தொழில் கட்டமைப்பையும், அவர்களின் வழக்கமான ராணுவ வலிமையின் பெரும்பகுதியையும் நாங்கள் அழித்தோம்" என்று தெரிவித்தார்.

அதன் பிறகு, "அவர்கள் அணுசக்தித் திட்டத்தை மீண்டும் கட்டமைப்பதை கடினமாக்கினோம். ஆனால், இது எப்போது முடிவுக்கு வரும் என நீங்கள் கேட்பது ​​இரானியர்கள் எப்போது கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துவார்கள் என்பது போன்ற கேள்வியாக உள்ளது. உண்மையில், அந்தக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரியாது. அதை நீங்கள் இரானியர்களிடம்தான் கேட்க வேண்டும்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு