காணொளி: அனிருத் - காவ்யா மாறன் திருமணம் - உறவினர்களாகும் ரஜினி, ஸ்டாலின்
காணொளி: அனிருத் - காவ்யா மாறன் திருமணம் - உறவினர்களாகும் ரஜினி, ஸ்டாலின்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் சன் குழுமத்தைச் சேர்ந்த காவ்யா மாறன் - திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் திருமணம் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.
இந்தத் திருமண உறவின் மூலம் மு.க.ஸ்டாலின் - மாறன் குடும்ப வட்டமும் தமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமான ரஜினிகாந்தின் குடும்பமும் இணையும்.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் இருவரும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கியதை தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கும் மாறன் தம்பதியர் நேரில் அழைப்பிதழ்களை வழங்கியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



