இந்தியாவில் அதிகரிக்கும் வைட்டமின் பி12 பற்றாக்குறை - யாருக்கு அதிக ஆபத்து?
இந்தியாவில் பி12 பற்றாக்குறை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையான ICMR சமீபத்தில் கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
கடந்த 2023-2025ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1.5 லட்சம் ரத்த மாதிரிகள், ரத்தசோகை தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 10-19 வயதுக்குட்பட்ட வளரிளம் ஆண்களிடையே (adolescent age) 66.1 சதவிகிதத்தினரும் வளரிளம் பெண்களிடையே 65.4 சதவிகிதத்தினரும் வைட்டமின் பி12 பற்றாக்குறையுடன் உள்ளனர். 63.1% கர்ப்பிணிகளுக்கு இந்த பற்றாக்குறை இருக்கு.
ஆரோக்கியமான கர்ப்ப காலத்துக்கும் இந்த வைட்டமின் முக்கியம். 20-59 வயதுக்குட்பட்ட ஆண்களிடையே 60.4%, 15-49 வயதுக்குட்பட்ட 57.4% பெண்களுக்கும் வைட்டமின் பி12 பற்றாக்குறை உள்ளது.
இந்த வைட்டமின் பி12 நம்ம உடலில் என்ன செய்கிறது? அது ஏன் முக்கியம்? அது குறைந்தால் என்னென்ன உடல்நல பிரச்னைகள் ஏற்படும்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



