'அதிமுகவும் நம்மளும் ஒன்னுதான்' - அமைச்சர் ஆதவ் பேச்சு

காணொளிக் குறிப்பு, "அதிமுகவும், நம்மளும் ஒன்னுதான்" - பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு
'அதிமுகவும் நம்மளும் ஒன்னுதான்' - அமைச்சர் ஆதவ் பேச்சு
பிரசுரிக்கப்பட்டது

"எல்லாம் நம்மளுடையதுதானே... அதிமுகவும், நாமும் ஒன்றுதானே" என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் சிரித்துக்கொண்டே பேசியது அவையில் பெரும் கலகலப்பை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பூவிருந்தவல்லி தொகுதி எம்.எல்.ஏ. பிரகாசம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள செவ்வாய்ப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தை விரைவில் கட்டித்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திருவள்ளூர் எங்களுடைய மாவட்டம் அங்கு 10-ல் பத்து தொகுதிகளை வென்றிருக்கிறோம். எம்.எல்.ஏவின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என பேசினார். அப்போது குறுக்கிட்ட அதிமுக உறுப்பினர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் தாங்கள் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டினர். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ஆதவ் அர்ஜுனா 10-க்கு 9 தொகுதிகள் வென்றிருக்கிறோம். எல்லாம் நம்மளுடையதுதனே, அதிமுகவும் நாமும் ஒன்றுதானே என கூறி சமாளித்தார்.

அவைச் தலைவர் ஜேசிடி பிரபாகரும் சிரித்துக்கொண்டே அந்த உறவெல்லாம் அவைக்கு தெரியாது என கூறினார். உடனே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் தங்களுக்கு இருக்கும் உறவை குறிப்பிட்டதாக ஆதவ் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு