காணொளி: குஜராத்தில் 45 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, குஜராத்தில் தண்ணீருக்காக 45 அடி கிணற்றுக்குள் இறங்கும் பெண்கள்
காணொளி: குஜராத்தில் 45 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்தப் பெண்கள், குடிநீருக்காக தினமும் சுமார் 45 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி, தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த காட்சிகள் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள மோடி பல்சான் கிராமத்தின் பெரஸ்தா பாலியா பகுதியிலிருந்து எடுக்கப்பட்டவை.

ஒரு வாளி தண்ணீர் பெற இந்த பெண்கள் இரும்பு ஏணிகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி கிணற்றுக்குள் இறங்குகின்றனர்.

இவ்வாறு செய்யும்போது பலமுறை பெண்கள் வழுக்கி கிணற்றுக்குள் விழுந்து, பலத்த காயமடைவதாக தெரிவிக்கின்றனர்.

சுமார் 1200 மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் 8 அரசு கிணறுகள் உள்ளன, ஆனால் கோடைக்காலம் நெருங்கும்போது, அனைத்து கிணறுகளும் வற்றிவிடுவதாக தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் ரூ. 586 கோடி மதிப்பிலான 'அஸ்தோல் க்ரூப் குடிநீர் வழங்கல் திட்டம்' செயல்படுத்தப்பட்டுள்ளது, ஆனாலும் உள்ளூர் மக்கள் தண்ணீர் கிடைக்கவில்லை என்கின்றனர்.

அஸ்தோல் திட்ட செயல் பொறியாளர், கிராமத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு