காணொளி: கொடைக்கானல் சாலையில் சுற்றித்திரிந்த புலிக்குட்டிகள்

காணொளிக் குறிப்பு, கொடைக்கானல் சாலையில் சுற்றித்திரிந்த புலிக்குட்டிகள்
காணொளி: கொடைக்கானல் சாலையில் சுற்றித்திரிந்த புலிக்குட்டிகள்
பிரசுரிக்கப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதிகெட்டான் சோலை, அருகே 4 புலிக்குட்டிகள் சாலையில் சுற்றித்திரிந்ததை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோக்களை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு