காணொளி: பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "பாகிஸ்தான், இஸ்லாமாபாத் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பிரதமர் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் மீது அதிக மதிப்பு உள்ளது. அவர்கள் எங்களுடன் இணைந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து எங்களுடன் பணியாற்றி வருகிறார்கள்.
ஆனால் இந்தப் பயணம் மிகவும் நீண்டது. இப்போது நாங்கள் தொலைபேசி வழியாக முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் இலக்கை அடைவார்களா என்பதில் உறுதி இல்லை.
அங்கு கடும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரானில் அவர்கள் ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இருப்பதில் கடும் பிரச்னை இருக்கிறது. தலைமை பிளவுபட்டுள்ளது. அங்கு 2 அல்லது 3 ஒருவேளை 4 குழுக்கள் இருக்கலாம். பிளவுபட்ட தலைமையாக உள்ளது. இப்படி இருந்தாலும், அவர்கள் எல்லோரும் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் குழப்ப நிலையில் உள்ளனர்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



