You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சட்ட விரோதமாக மது விற்பனை - கடையை சூறையாடிய பெண்கள்
தருமபுரியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்துகளில் கடை அமைத்து சட்ட விரோதமாக மதுவை விற்பனை செய்யும் பழக்கம் தங்கு தடையின்றி நடப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இவை 'சந்துக்கடைகள்' என அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த இத்தகைய சந்துக்கடைகளை பொதுமக்கள் அடித்து சேதப்படுத்தினர். மேலும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளரிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு