காணொளி: நொய்யல் நுரைக்கு ஷாம்பு காரணமா? அமைச்சர் ராஜீவ் vs செல்லூர் ராஜூ

காணொளிக் குறிப்பு, =
காணொளி: நொய்யல் நுரைக்கு ஷாம்பு காரணமா? அமைச்சர் ராஜீவ் vs செல்லூர் ராஜூ
பிரசுரிக்கப்பட்டது

வடகிழக்கு பருவமழை காரணமாக‌ அண்மையில் திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீரூடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சரின் பதில் குறித்து விமர்சித்துள்ளார். இதற்கிடையில் அமைச்சர் இந்த விமர்சனங்களை குறிப்பிட்டு விளக்கமளித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக‌ அண்மையில் திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீரூடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அளித்த பதில் பேசுபொருளானது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இதுகுறித்து விமர்சித்துப் பேசினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இதுபற்றி தனது X தளத்தில் விமர்சித்திருந்தார். அதில், "சோப்பு மற்றும் ஷாம்பூ பயன்பாடுதான் ஆறுகளில் நுரை உருவாகக் காரணமா? யாருக்கான குரலாக சுற்றுச்சூழல் அமைச்சர் ஒலிக்கிறார்? எனக் குறிப்பிட்டுள்ள அவர், "அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும் "இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பவர் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பதுதான் இதைவிடவும் வேதனையளிக்கும், கவலையளிக்கும் விஷயம்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு