காணொளி: சென்னையில் சராசரியாக 7.3 செ. மீ மழை- மாநகராட்சி ஆணையர்
சென்னையில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்ததை அடுத்து, மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 7.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக வளசரவாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, அடையார், கோடம்பாக்கம் மற்றும் ஏஜிஎஸ் காலனி ஆகிய பகுதிகளில் 10 செ.மீ-க்கும் அதிகமாக மழை கொட்டி தீர்த்துள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் காலனியைத் தவிர நகரின் பிற பகுதிகளில் பெரிய அளவில் நீர் தேங்கவில்லை. நேற்று நள்ளிரவில் ஜான் சப்வே, பெரம்பூர் சப்வே மற்றும் கிண்டி சப்வே ஆகிய மூன்று சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு, தற்போது போக்குவரத்து முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், 137 உயர் திறன் மோட்டார்கள் மற்றும் 15,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சமீரன் தெரிவித்தார்
வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அக்டோபர் 22 வரை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



