காணொளி: தமிழ்நாடு எம்எல்ஏக்களின் மாத சம்பளம் எவ்வளவு?
கடந்த 2017 வரைக்கும் தமிழ்நாடு எம்.எல்.ஏ-க்களுடைய மாத சம்பளம் மாதம் ரூ.55,000-ஆக இருந்தது.
2017-ல் அதிமுக ஆட்சியின்போது, இந்த ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன்படி சம்பளம் மற்றும் படித்தொகைகள் சேர்த்த ஒட்டு மொத்த ஊதியம் ரூ.1,05,000-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த ஊதியம் தொடர்பாக இப்போது நடைமுறையில இருக்கும் விதிகள், கடந்த 2024 மே மாதம் 21ஆம் தேதியன்று திருத்தப்பட்டது.
இந்த விதிப்படி முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் MLA என எல்லாருக்குமே அடிப்படை ஊதியம் ரூ.30 ஆயிரம் தான். இதுபோக சில படிகள் இருக்கு.
மாதாந்திரப் படி – ₹10,000, தொகுதிப்படி – ₹25,000, அஞ்சல்படி ₹2,500, தொலைபேசிப்படி - ₹7,500, தொகுப்புப்படி - ₹5,000, வாகனப்படி – ₹25,000
இவை தவிர, முதல்வர், துணை முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், துணைத்தலைவர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர், அரசு கொறடா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பல சலுகைகள் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



