காணொளி: பிரான்சில் கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வன்முறை

காணொளிக் குறிப்பு, பிரான்சில் கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வன்முறை
காணொளி: பிரான்சில் கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வன்முறை
பிரசுரிக்கப்பட்டது

சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வென்றதை தொடர்ந்து, பிரான்சில் நடந்த கால்பந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது. பிரான்ஸ் முழுவதும் ஆங்காங்கே கால்பந்து ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதுதொடர்பாக, 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் பாரிஸில் பேருந்து, ரயில் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் முடங்கிப் போயின. நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு