காணொளி: சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பை கடந்து நிற்கும் கேள்விகள்
காணொளி: சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பை கடந்து நிற்கும் கேள்விகள்
தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதித்து மதுரை அமர்வு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 10வது நபரான பால்துரை கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
சம்பவம் நடந்து ஏறக்குறைய 6 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் பெயரை நமக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இந்தத் தீர்ப்பைக் கடந்து, இந்த வழக்கில் சில முக்கியமான கேள்விகளும் உள்ளன. அதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



