காணொளி: இந்த ஐபிஎல் சீசனில் வைபவ் சூர்யவன்ஷி படைத்த சாதனைகள் என்ன?
கடந்த ஐபிஎல் சீசனில் மிக இளம் வீரராக அறிமுகமாகிய வைபவ் சூர்யவன்ஷி, இந்தியர் ஒருவரின் அதிவேக ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். 2026 ஐபிஎல் சீசன் தொடங்கியபோது அவர்மீது நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இரண்டாவது சீசனில் ஜொலிக்க முடியுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் அவர்மீது வைக்கப்பட்ட சந்தேகங்களை எல்லாம் முறியடித்து இந்த சீசனிலும் பல சாதனைகளை படைத்துள்ளார் சூர்யவன்ஷி.
2026 ஐபிஎல் சீசனில் 776 ரன்கள் எடுத்து ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்த அன்கேப்ட் வீரர் எனற சாதனை...
72 சிக்ஸர்கள் அடித்து ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை...
ஒரு ஐபிஎல் சீசனில் 200+ ஸ்டிரைக் ரேட்டில் 600 ரன்களுக்கும் மேலாக எடுத்த முதல் வீரர் என்ற சாதனை....
12 சிக்ஸர்கள் அடித்து ஒரு பிளே ஆஃப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை...
மிகக் குறைந்த பந்துகளில் 10 சிக்ஸர்கள் விளாசியவர் என்ற சாதனை...
ஒரு போட்டியின் பவர்பிளேவிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனை...
23 இன்னிங்ஸில் 1000 ரன்களை குவித்து ஐபிஎல் அரங்கில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனை...
440 பந்துகளில் 1000 ரன்களை கடந்து ஐபிஎல் அரங்கில் குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனை...
பவர்பிளேவில் 521 ரன்கள் அடித்து ஒரு ஐபிஎல் சீசனில் பவர்பிளேவில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை என பல்வேறு சாதனைப் படைத்துள்ளார் சூர்யவன்ஷி.
2011 சீசனில் மாற்று வீரராக வந்த கிறிஸ் கெய்ல் ஆர்சிபி அணிக்காக மிரட்டலாக விளையாடியது, 2016 ஐபிஎல் சீசனில் விராட் கோலி 973 ரன்கள் குவித்தது போன்ற மறக்க முடியாத ஒரு சீசனைக் கொடுத்திருக்கிறார் சூர்யவன்ஷி
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



