காணொளி: 'மாதம் ரூ.10 லட்சம்' - கோயா விற்பனையில் வருமானம் ஈட்டும் பெண்

காணொளிக் குறிப்பு, 'மாதம் ரூ. 10 லட்சம்' - கோயா விற்பனையால் வருமானம் ஈட்டும் பெண்
காணொளி: 'மாதம் ரூ.10 லட்சம்' - கோயா விற்பனையில் வருமானம் ஈட்டும் பெண்

குந்தல்கிரி மலைப்பகுதியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் சமணக் கோவில்களின் அமைதியான ஆன்மீகத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது இந்த பேடாக்களின் தனித்துவமான இனிமை. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பக்தர்களும் பயணிகளும் விரும்பிச் சுவைத்து வரும் இவை, அந்தப் பகுதியின் அடையாளமாக மாறியுள்ளன.

இந்த பேடாக்களை தயாரிக்கப் பயன்படும் 'கோயா' என்பது வெறும் பால் சார்ந்த பொருள் மட்டுமல்ல; அது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம், மரபு, மற்றும் பெருமைக்குரிய அடையாளமாகவும் திகழ்கிறது. ஷிவ்கன்யா பிரதீப் ஷெல்கே என்பவரும் அத்தகையோரில் ஒருவர்.

வணிகவியல் பட்டம் பெற்ற ஷிவ்கன்யா, தனது கிராமத்தை விட்டு வெளியேறாமலே, இந்த கோயா தயாரிப்பின் மூலம் மாதத்திற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

"இந்தத் தொழில் பெண்களுக்கு மிகவும் ஏற்றது. விவசாயப் பணிகளில் ஈடுபட முடியாதவர்கள்கூட இதை வீட்டிலிருந்தபடியே செய்யலாம். மகளிர் சுயஉதவி குழுக்கள் விரும்பினால், கால்நடைகள் வாங்க கடன் வசதி கிடைக்கிறது. அவர்கள் பாலை எங்களிடம் கொண்டு வருகிறார்கள்; அதை நாங்கள் கோயாவாக மாற்றுகிறோம்" என்கிறார், ஷிவ்கன்யா பிரதீப் ஷெல்கா.

குந்தல்கிரியில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம்பிக்கை இந்த கோயாவுக்கு இனிமை சேர்த்தது. இன்று, புவிசார் குறியீடு (GI Tag) அதற்கு ஒரு பெயரையும், பரந்த சந்தையையும் வழங்கியுள்ளது.

இந்த மரபைக் காக்கும் கைகள், கண்ணியத்துடனும் பெருமையுடனும் இனியும் வாழ முடியும் என்பதை இது உறுதி செய்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு