விவாகரத்தைக் கொண்டாட விழா நடத்திய தென் கொரிய பெண்
தென் கொரியாவைச் சேர்ந்தவர் சியூங்யான் சோ. இவர் தனது விவாகரத்தை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளார்.
"திருமணத்தை மட்டும் பொதுவெளியில் கொண்டாட முடியுமென்றால், ஒரு தனி நபர் விவாகரத்துக்குப் பிறகு, தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் முடிவை ஏன் அப்படி கொண்டாடக் கூடாது?" என்கிறார் சியூங்யான் சோ.
இந்த விழாவின் போது, அவர் தனக்காக சில உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டார். இணையத்தில், இவரது இந்த விழா குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
"விவாகரத்து பெற்ற பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவர்களின் வட்டத்திற்குள் நான் பொருந்தவில்லை. நான் இதுபோன்று காணொளிகளைப் பகிர்வதும், விவாகரத்திற்குப் பிறகு சிறந்த வாழ்க்கையை வாழும் ஒரு பெண்ணுக்கு உதாரணமாக இருப்பதும், அந்த சமூக மாற்றத்திற்கான ஒரு முன்னெடுப்பாக இருக்கும் என நம்புகிறேன்" என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



