'புதன் கோளில் இருக்கும் நீர்' பற்றி ஆய்வு செய்யும் பெபி கொலம்போ விண்கலம்

காணொளிக் குறிப்பு,
'புதன் கோளில் இருக்கும் நீர்' பற்றி ஆய்வு செய்யும் பெபி கொலம்போ விண்கலம்
பிரசுரிக்கப்பட்டது

புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. 2012இல், அதன் பள்ளங்களில் பனிக்கட்டி வடிவிலான நீர் இருக்கலாம் என்பதற்கான தடயங்களை ஒரு விண்கலம் கண்டறிந்தது.

​​'பெபி கொலம்போ' (BepiColombo) என்று அழைக்கப்படும் விண்கலம் ஒன்று புதன் கோளைச் சுற்றி வரவுள்ளது. இது அங்குள்ள பனிக்கட்டியையும், அங்கு நிகழும் பிற விசித்திரமான நிகழ்வுகளையும் ஆய்வு செய்யும்.

புதனில் நீர் எவ்வாறு மறைந்திருக்கிறது என்பதை மேலும் அறிந்துகொள்வது பிற கிரகங்களில் உயிர் வாழ ஏதுவான சூழல் இருக்கக் கூடிய இடங்களைக் கண்டறிய நமக்கு உதவலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு