காணொளி: 'உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்?' - கேள்வி எழுப்பிய முகவர்
காணொளி: 'உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்?' - கேள்வி எழுப்பிய முகவர்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தாராபுரத்தில் வாக்கு எண்ணிக்கைச் சுற்று ஒன்றில் வேட்பாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவருக்கு இடப்பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக 'நாம் தமிழர் கட்சி' முகவர் அங்கிருந்த காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்கு எண்ணிக்கைச் சுற்றின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு முகவர் அங்கு இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இடவசதி இல்லை என்ற காரணத்தை கூறி உள்ளே அனுமதிக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். காவல்துறையினர் அவரோடு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் வாக்கு எண்ணும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



