மத்திய கிழக்கில் பதிவானதாகக் கூறப்படும் பறக்கும் தட்டு காட்சிகளை வெளியிட்ட அமெரிக்கா
மத்திய கிழக்கில் அடையாளம் தெரியாத அசாதாரண நிகழ்வுகளை காட்டுவதாகக் கூறப்படும் காணொளிகளை அமெரிக்க அரசாங்கம் இரகசியக் காப்பு நிலையில் இருந்து நீக்கியுள்ளது. 2020 மற்றும் 2026-க்கு இடையில் பதிவு செய்யப்பட்ட இந்தக் காணொளிகளை அமெரிக்க இராணுவம் பகிர்ந்துள்ளது. இந்தக் காட்சிகளுடன் வெளியிடப்பட்ட விளக்கத்தில், பென்டகன் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்களை 'மாறுபட்ட ஒளிப்பகுதிகள்' எனக் குறிப்பிட்டுள்ளது.
"விவரிக்கப்பட்ட நிகழ்வின் நம்பகத்தன்மை, தன்மை அல்லது முக்கியத்துவம் குறித்து, இந்த விளக்கத்தின் எந்தப் பகுதியையும் ஒரு பகுப்பாய்வுத் தீர்ப்பு, புலனாய்வு முடிவு அல்லது உண்மைத் தீர்மானமாகப் மக்கள் கருதக்கூடாது" என்று இராணுவம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் UFO-க்கள் குறித்த அரசாங்கக் கோப்புகளை வெளியிட உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வெளியீடு வந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



