Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 மே, 2007 - பிரசுர நேரம் 13:26 ஜிஎம்டி
மின்அஞ்சலாக அனுப்புகஅச்சு வடிவம்
முன்னேறும் தலித் பெண்கள்
விமானப்பணிப் பெண்களாவதற்காக பயிற்சி பெறும் தலித் பெண்கள்
விமானப்பணிப் பெண்களாவதற்காக பயிற்சி பெறும் தலித் பெண்கள்
புதிய முயற்சி

இந்தியாவின் பல பகுதிகளில் இன்னமும்
தீண்டாமையும் வறுமையும் இணைந்து தலித் மககளது வாழ்நிலையை கடுமையாக பாதிக்கின்றன.

ஆனால், அவர்களின் நிலையில் மாற்றமேற்பட அவ்வப்போது சிற்சில முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேலாண்மை நிறுவனம் (தாட்கோ) தமிழகமெங்கிருந்தும் நூறு தலித் மாணவியரை தேர்வு செய்து அவர்களுக்கு விமானப்பணிப் பெண்களுக்கான பயிற்சியை கொடுக்கிறது.

சென்னையில் தற்போது இன்டியன் ஏர்ஹோஸ்டஸ் அகெடமி எனும் நிறுவனம் அப்பயிற்சியினை அளித்துவருகிறது. அந்நிறுவனத்தின் சென்னைப்பிரிவு மேலாளர் கண்ணன் தங்களிடம் பயிலும் மாணவியர் மிக ஆர்வமாக கற்றுக்கொள்வதாகவும், விமானப்பணிப்பெண் என்று மட்டுமல்லாமல், விமானப் போக்குவரத்தின் பல்வேறுநிலைகளிலும், சுற்றுலாத்துறையில் வரவேற்பாளர் போன்ற பணிகளிலும், பயிற்சி பெறுவோருககு வாய்ப்புக்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பயிற்சியாளர் ஸ்ரீகுமார், கிராமங்களிலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து இவர்கள் வந்தவர்களாக இருந்தாலும் ஆங்கிலத்தைக்கூட செவ்வனே கற்றுக் கொள்ளும் ஆர்வம் அவர்களிடம் இருப்பதாகக குறிப்பிட்டார்.

பயிற்சி பெறும் மாணவியர் தாழ்வுமனப்பான்மை ஏதுமின்றி நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர்நோக்குவதாகக் கூறினார்.
தாட்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவசூரியன். இதுபோன்ற மேலும் பல முன்னோடித் திட்டங்களை தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அமல்படுத்தவிருப்பதாக அவர் கூறினார்.

இவற்றையும் காண்க
மின்அஞ்சலாக அனுப்புகஅச்சு வடிவம்
BBC Copyright Logo^^ மேலே செல்க
முகப்பு|நினைவில் நின்றவை|எம்மைப்பற்றி|வானிலை
BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
உதவி|தகவல் பாதுகாப்பு|எம்மைத் தொடர்புகொள்ள