காணொளி: விபத்தில் கையை இழந்தும் ஒற்றைக் கையில் எம்பிராய்டரி செய்யும் பெண்

காணொளி: விபத்தில் கையை இழந்தும் ஒற்றைக் கையில் எம்பிராய்டரி செய்யும் பெண்

ஃபுல்காரி என்பது பூ வடிவிலான எம்பிராய்டரி வேலைப்பாடு… இது பட்டு நூல் கொண்டு துணிகளில் செய்யப்படும் எம்பிராய்டரி. ஷீரோ ராணி, தன்னுடைய ஒற்றைக் கையால் ஃபுல்காரி எம்பிராய்டரி செய்கிறார்.

ஃபுல்காரி எம்பிராய்டரிக்கு பயன்படும் ஊசி மற்றும் நூல் அவருக்கு வெறும் ஊசி மற்றும் நூல் அல்ல, மாறாக அவை ஒரு பேனா போன்றது. தன்னுடைய வாழ்க்கையை புதிய வழியில் எழுத அவருக்கு தைரியம் அளித்த பேனா.

விபத்து ஒன்றில் அவருடைய கை துண்டிக்கப்பட்டபோது அவருக்கு வெறும் ஐந்து வயது மட்டுமே. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃபுல்காரி எம்பிராய்டரி அவரின் வாழ்வில் புதிய திருப்பத்தை அளித்தது.

பஞ்சாபை சேர்ந்த பெண்கள் பலருக்கும் ஃபுல்காரி எம்பிராய்டரி வெறும் வாழ்வாதாரத்துக்கு மட்டுமானது அல்ல. தேசிய அளவில் அவர்களுக்கு அங்கீகாரத்தையும் அது பெற்றுத் தருகிறது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு