திருப்பூர் அருகே கோவிலுக்குள் வெள்ளம் - உண்டியல் பணத்தை 'அயர்ன்' செய்த அதிகாரிகள்

காணொளிக் குறிப்பு, கோவிலுக்குள் வெள்ளம்; உண்டியல் பணத்தை அயர்ன் செய்த அதிகாரிகள்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் சூழ்ந்தது.

இதில் கோவில் உண்டியில் இருந்த காணிக்கை பணம் தண்ணீரில் நனைந்தது.

வெள்ளம் வடிந்த பிறகு அக்டோபர் 23ம் தேதி கோவிலுக்குச் சென்ற அதிகாரிகள், வளாகத்தை தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து, உண்டியலில் இருந்த பணத்தை வெளியே எடுத்து அயர்னிங் இயந்திர உதவியுடன் உலர்த்தினர். பின்னர், மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் காணிக்கைப் பணம் இந்து சமய அறநிலையத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு