காணொளி: 'உலகளாவிய நெருக்கடிகளால் இந்தியாவுக்கு சவால்' - நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?
பல்வேறு உலகலாவிய நெருக்கடிகளால் சவால்கள் இருக்கப் போகின்றன என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மேற்கு ஆசியா நெருக்கடி, ஹோர்மூஸ் நீரிணை நெருக்கடி, ரஷ்யா - யுக்ரேன் போர் நெருக்கடி, இரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் பதற்றம், விநியோக சங்கிலி பாதிப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் விலை, உர விலை. இவை அனைத்தும் சிறிய அளவில் அல்ல, மிகவும் கடுமையான விலை உயர்வுகள். இவற்றுக்கெல்லாம் அந்நியச் செலாவணி மூலமாக செலுத்த வேண்டியிருக்கும்.
ஆகவே, இவை சவால்களாக இருக்கப் போகின்றன.
ஆனால், எனக்கு நம்பிக்கை உள்ளது. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.
பிரதமரின் வழிகாட்டுதலுடன், நம்மால் உருவாக்கப்படாத இந்த சவால்களை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை ஒரு வாரம் 83 ஆகவும், அடுத்த வாரம் 86, 92, 101, 102, 116 என தொடர்ந்து உயர்ந்தாலும், அதை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில், மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



