காணொளி: நீலகிரியில் பரவி வரும் காட்டுத்தீ - ஹெலிகாப்டர் மூலம் அணைக்க முயற்சி

காணொளி: நீலகிரியில் பரவி வரும் காட்டுத்தீ - ஹெலிகாப்டர் மூலம் அணைக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் பார்சன்ஸ் வேலி, பைக்காரா ஆகிய இடங்களை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வந்த நிலையில் தமிழக வனத்துறையின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணிக்காக வரவழைக்கப்பட்டன.

தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய விமான படை தெரிவித்துள்ளது. தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 2000 ஏக்கருக்கு மேல் காட்டுப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு