காணொளி: 'திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி'- சி.வி சண்முகம் கூறியது என்ன?

காணொளி: 'திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி'- சி.வி சண்முகம் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பிறகு, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய சி.வி. சண்முகம், "25 பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவினர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அதிமுகவில் சிறுபான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்" என்று கூறினார்.

"புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்கப்போவதாக தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து பெற்றார்" என்றும் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

"திமுகவை எதிர்த்து அரசியல் செய்த எங்களை திமுக ஆதரவோடு ஆட்சியமைக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு