காணொளி: நொய்டாவில் வன்முறையாக மாறிய போராட்டம்
காணொளி: நொய்டாவில் வன்முறையாக மாறிய போராட்டம்
உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரிய போராட்டம் வன்முறையாக மாறியது.
பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் ஊதிய அதிகரிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கல்வீச்சு, தீவைப்பு, போன்ற வன்முறை சம்பவங்களும் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்ததாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இதன் காரணமாக டெல்லி - நொய்டா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



