மாட்டிறைச்சி சர்ச்சை: கோவை பள்ளியில் பிளஸ்-1 மாணவருக்கு என்ன நடந்தது?
எச்சரிக்கை: இந்தக் காணொளியில் தற்கொலை தொடர்பான விவரங்கள் உள்ளன.
கோவையில் பிளஸ் 1 மாணவர் அகிலன் வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியர் உள்பட நான்கு பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
"வகுப்பறையில், 'மாட்டிறைச்சி சாப்பிடுவியா?' என ஆசிரியர் கேட்டுள்ளார். என் மகன் 'ஆமாம்' எனக் கூறியதை வைத்தே சக மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டனர்" எனக் கூறுகிறார், மாணவரின் தந்தை. "காவல்துறையின் விசாரணைப் போக்கு சரியானதாக இல்லை" எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் மறுத்துள்ளார். இதுவரை நடந்துள்ள விவகாரங்கள் குறித்து பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மாணவர் மரணம் தொடர்பாக பள்ளியில் விசாரணை நடத்தி வருவதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



