You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டிரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச் சூட்டின்போது சாலட் சாப்பிட்ட நபர்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொண்ட நிகழ்வில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது ஒருவர் நிதானமாக சாலட் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு வழங்கப்பட்ட விருந்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தபோது, மைக்கேல் கிளாண்ட்ஸ் என்பவர் அமைதியாக தனது சாலட்டைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
நியூயார்க்கைச் சேர்ந்தவரான மைக்கேல் தனக்கு இது போன்ற பரபரப்பான சம்பவங்களை எதிர்கொள்வது பழகிபோன ஒன்று என்றும், துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க தரையில் படுத்து தனது புதிய ஆடையை அழுக்காக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு