காணொளி: ஜப்பானில் ஷார்ட்ஸ் அணிந்து அலுவலகம் செல்லும் அரசு ஊழியர்கள்
காணொளி: ஜப்பானில் ஷார்ட்ஸ் அணிந்து அலுவலகம் செல்லும் அரசு ஊழியர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஜப்பானின் டோக்கியோவில் அதீத வெப்பத்தால் அரசு ஊழியர்கள் சூட்களை துறந்து ஷார்ட்ஸ்களுக்கு மாறி வருகின்றனர்.
அதுகுறித்துப் பேசிய ஊழியர் ஒருவர், "பழக்கமில்லாததால் இது முதலில் விசித்திரமாகப்பட்டது. பிறகு காலப்போக்கில் அதற்குப் பழகிக் கொண்டேன். சக ஊழியர்கள் பலரும்கூட இதேபோல் உடை அணிந்ததால், எனது தயக்கமும் மறைந்துவிட்டது" என்று கூறினார்.
இது விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது. ஆண்கள், இப்படி உடையணியும்போது, பெண்கள் டைட்ஸ் அணிய வேண்டுமென எதிர்பார்ப்பது அநீதி என்று சிலர் கருதுகின்றனர். மேலும் சிலர், சக ஆண் ஊழியர்களின் கால்கள் தெரிவதை அசௌகரியமாக உணர்வதாக அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



