மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கையையொட்டி கூடுதல் பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், ANI
மேற்கு வங்கத்தில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, சனிக்கிழமை (மே 2) அன்று கூடுதலாக 165 வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களையும் 77 காவல் பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்கனவே பணியில் உள்ள 294 பார்வையாளர்களுக்கு உதவியாக கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கூடுதல் காவல் பார்வையாளர்கள் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே சட்டம்-ஒழுங்கைக் கண்காணிப்பார்கள்.
பொதுவாக வாக்கு எண்ணிக்கையின் போது காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் இந்தப் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் நுழைய அனுமதி கிடையாது; அவர்கள் மையங்களுக்கு வெளியே மட்டுமே சட்டம்-ஒழுங்குப் பணிகளைக் கவனிப்பார்கள்.















