அதிக இடங்களில் முன்னிலை - விஜய்க்கு திரைத்துறையினர் வாழ்த்து
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் எந்தெந்த கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது என்பதை அறிய...
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நன்றி நேயர்களே!
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான நேரலைப் பக்கத்தில் எங்களுடன் இணைந்திருந்ததற்கு நன்றி.
தேர்தல் முடிவுகள் தொடர்பான பகுப்பாய்வுகள், கள நிலவரங்கள், அடுத்த கட்ட அரசியல் சூழல் குறித்த தகவல்கள் இந்தப் பக்கத்தில் தொடர்ந்து வழங்கப்படும். நாளையும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி தவெக 73 இடங்களில் முன்னிலை 33 இடங்களில் வெற்றி.
"சிறப்பான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இரவு 8 மணி நிலவரப்படி தவெக 73 இடங்களில் முன்னிலை 33 இடங்களில் வெற்றி.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
வெற்றி சான்றிதழை பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “இரண்டாவது முறையாக என்னை வெற்றி பெற செய்த இந்த தொகுதி மக்களுக்கு நன்றி. நல்ல சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.
தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவை, தீர்ப்பை கொடுத்திருக்கின்றனர். அந்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்ற அனைவருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துகள்.” என்றார்.
தவெக அதிக இடங்களில் முன்னிலை பெறுவது குறித்த கேள்விக்கு, “நாளை அநேகமாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கூட்டம் நடக்கும். இதுதொடர்பாக திமுக தலைவர் அறிவுறுத்தல்களை வழங்குவார்” என்றார்.
தவெகவுக்கு பிரதமர் மோதி வாழ்த்து
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரதமர் மோதி (கோப்புப்படம்)
தமிழக வெற்றிக் கழகத்துக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. மக்களின் பிரச்னைகள் மீது கவனம் செலுத்துவதிலும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
சிறப்பான செயல்பாட்டை நிகழ்த்திய தவெகவுக்கு வாழ்த்துகள்.
தமிழகத்தின் முன்னேற்றத்தையும் அதன் மக்களின் நல்வாழ்வையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.” என பதிவிட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த வி.எஸ். பாபு வெற்றி பெற்றுள்ளார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்துள்ளார்.
வெற்றி சான்றிதழை பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.எஸ். பாபு, “விஜய் எந்த வழியில் செல்கிறாரோ அந்த வழியில் நாங்கள் தொண்டனாக இருந்து செயல்படுவோம்” என்றார்.
அதிக இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு, “எல்லா புகழும் தளபதிக்கே (விஜய்). வெற்றி பெற்றது நான் அல்ல, தளபதிதான். முழு வெற்றிக்கும் அவர்தான் காரணம்.
என் தொகுதியில் மக்களிடம் இருந்து லஞ்சம் பெறாமல் திட்டங்களை செயல்படுத்துவோம்.” என்றார்.
"அனைத்து தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து வாக்களித்துள்ளனர்" - செங்கோட்டையன்
அனைத்து தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களித்துள்ளதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையத்தில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“பல்வேறு சோதனைகளை கடந்து மக்களுக்கு சேவை செய்ய ஒரு தலைவர் உள்ளார் என்று மக்கள் விரும்புகிற தலைவராக தவெக தலைவர் இருக்கிறார். தமிழகம் முழுவதும் விதிகளுக்கு உட்பட்டு பல பகுதிகளுக்குச் சென்றார் விஜய். யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல, அவர்தான் வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்து இருக்கின்றனர்.
நாளை தமிழகம் இந்தியாவுக்கு ஒரு வழிகாட்டியாக உருவாவதற்கு இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிற வரமாக நான் கருதுகிறேன். உயிர்மூச்சு உள்ளவரை அவரோடு இணைந்து பணிபுரிவேன்” என தெரிவித்தார்.
தேர்தலில் மார்ட்டின் குடும்பத்தாரின் நிலை என்ன?
பட மூலாதாரம், @AadhavArjuna/X
படக்குறிப்பு, ஆதவ் அர்ஜுனா
'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் குடும்பத்தில் மூன்று பேர் வெவ்வேறு கட்சி சார்பாக போட்டியிட்டனர். அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் என்ன நிலவரம்?
மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது அத்தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல், தவெக சார்பில் கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஆகியோர் போட்டியிட்டனர்.
பட மூலாதாரம், Social media
படக்குறிப்பு, லீமா ரோஸ்
மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அத்தொகுதியில், திமுக சார்பில் கார்த்திக் மோகன், அதிமுக சார்பில் விஜயகுமார், நாம் தமிழர் சார்பில் ரோஷிணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோன்று, மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ்மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து காமராஜ் நகரில் போட்டியிட்டார். இத்தொகுதியில் தற்போது அவர் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்திதியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திமுக, அதிமுகவை விஞ்சி விஜய்க்கு முதல் தேர்தலிலேயே பெருவெற்றி வசப்பட்டது எப்படி?
பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, விஜய் (கோப்புப்படம்)
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவரைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலரும் தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர்.
தற்போதைய நிலவரம் தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட முடிவுகளை இந்த தேர்தல் வழங்கும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் என்ன நடந்தது? விஜய் இதைச் சாத்தியமாக்கியது எப்படி? முழு கட்டுரையை வாசிக்க:
"முதல் தேர்தலிலேயே பெரிய தாக்கம்" - விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 - முன்னிலை நிலவரம்
தஞ்சாவூர் தொகுதியில் தவெக வெற்றி
தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய் சரவணன் 87705 வாக்குகள் பெற்று வெற்றி
திமுக வேட்பாளர் ராமநாதன் பெற்ற வாக்குகள்: 70750
பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் பெற்ற வாக்குகள்: 26790
தவெக அதிக இடங்களில் முன்னிலை - திரைத்துறையினர் வாழ்த்து
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், திரைத்துறையினர் பலரும் தவெகவுக்கும் அதன் தலைவர் விஜய்க்கும் எக்ஸ் பக்கத்தில் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
“நம் மாநிலத்தில் வரலாறு படைக்கப்படுகிறது. வாழ்த்துகள் விஜய் சார்! நான் பிறந்ததிலிருந்து திராவிடக் கட்சிகள் தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக்கொள்வதை மட்டுமே பார்த்திருக்கிறேன், இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாகும். முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, ஆனாலுக்கு இது எங்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம்.”
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி
“இது வரலாற்றுபூர்வமானது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…!
விஜய் சாருக்கும் அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகள்!”
நடிகர் ஜீவா
“பிளாஸ்ட்டு, பிளாஸ்ட்டு…”
நடிகர் சர்வானந்த்
“நான் முன்பே கூறியது போல, சில பயணங்கள் நாம் நினைப்பதை விட பெரியவை.
இந்தத் திருப்புமுனையான தருணத்தில் விஜய் சாருக்கு வாழ்த்துகள். சினிமா முதல் தலைமைப் பொறுப்பு வரை, நீங்கள் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளீர்கள்.
இனி வரவிருக்கும் பயணங்களுக்கு உங்களுக்கு வலிமையும், நோக்கமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.”
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
மேலூர் தொகுதியில் 2,724 வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மதுரை வீரனை தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன்
கூடலூர் தொகுதியில் திமுக வெற்றி
கூடலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திராவிடமணி 65590 வாக்குகள் (22833 வித்தியாசம்) பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பொன். ஜெயசீலன் 42757 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தவெக வேட்பாளர் தீபக் சாய் கிஷோர் 34962 மூன்றாம் இடம் பிடித்தார்.
தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா
காணொளிக் குறிப்பு, தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காலை 1.12 மணி நிலவரப்படி தவெக 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டுக்கு த்ரிஷா வந்தார்.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - முன்னிலை நிலவரம்
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 - முன்னிலை நிலவரம்