காணொளி: வாக்கு சேகரிக்க வித்தியாசமான முறையை கையாண்ட வேட்பாளர்கள்

காணொளிக் குறிப்பு, 'தோசை... பஜ்ஜி... ஜூஸ்...' - உணவு சமைத்து வாக்கு சேகரிப்பு
காணொளி: வாக்கு சேகரிக்க வித்தியாசமான முறையை கையாண்ட வேட்பாளர்கள்

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தோசை, பஜ்ஜி போண்டா போன்றவற்றை சமைத்து வித்தியாசமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவை கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் என்.தட்டக்கல் கிராமத்தில் கடை ஒன்றில் போண்டா சுட்டு அங்குள்ள பொது மக்களிடம் வாக்குகளைச் சேகரித்தார்.

அதேபோல, கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசீலன் ஜூஸ் கடை ஒன்றில் திராட்சை ஜூஸ் போட்டு வாக்கு சேகரித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு