You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 9 நாட்கள் தேடலுக்கு பிறகு பிடிபட்ட ஓநாய்
காணொளி: 9 நாட்கள் தேடலுக்கு பிறகு பிடிபட்ட ஓநாய்
தப்பியோடிய ஓநாய் ஒன்று 9 நாட்கள் தேடலுக்கு பிறகு பிடிபட்டது. தெர்மல் கேமரா மூலம் ஓநாய் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. அதன் பிறகு, மயக்க ஊசி செலுத்தப்பட்டு அந்த ஓநாய் பிடிக்கப்பட்டது.
தென்கொரியாவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவிலிருந்து தப்பி ஓடிய இந்த இரண்டு வயது ஓநாயான நியூகுவைக் கண்டுபிடிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிடிபட்ட ஓநாயைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், அதன் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு